தேசிய கீதத்தை மறந்த எம்.பி - அவசர அவசரமாக தேசிய கீதம் நிறைவு
உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.ஹசன் தேசிய கீதத்தை மறந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.ஹசன் தேசிய கீதத்தை மறந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, கால்ஷஹீத் பூங்காவில் தேசியக் கொடியை ஏற்றிய எஸ்.டி.ஹசன், தேசிய கீதம் பாடத் துவங்கினார். ஆனால் ஆரம்பித்த சில நொடிகளிலேயே அவருக்கு வரிகள் மறந்து விடவே, சுற்றி முற்றி பார்த்தார். அனைவரும் அவரைப் போலவே வரிகளை மறந்து திணறிய நிலையில், ஒரு வழியாகப் பாடி முடித்தால் போதும் என்று, ஜெய ஹே...ஜெய ஹே... என்று பாடி, அவர் தேசிய கீதத்தை நிறைவு செய்தார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.