தொடர் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள் - நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைப்பு

பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2021-07-29 15:52 GMT
பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.  மக்களவை தொடங்கியதும், சபாநாயகரை சூழந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் பெகாசஸ் குறித்து கேள்வி எழுப்பி, காகிதங்களை கிழித்து எறிந்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட, உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும், இல்லையெனில் சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என சபாநாயகர் எச்சரித்தார். இதற்கு காங்கிரஸ் எம்பி அதிர் ரஞ்சன் சௌத்ரி, மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்கும் எதிர்கட்சியினரை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து இரு தரப்பினரும் கூச்சலிட , மக்களவை அரைமணி நேரம் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மீண்டும் அவை கூடியதும் பேசிய ஓம்பிர்லா, அவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனாலும், அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்