"பெகாசஸ் விவகாரம்; விசாரணை தேவை" - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
நாட்டில் பலரது செல்போன் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் பலரது செல்போன் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினத்தையொட்டி, காணொலி மூலம் மேற்கு வங்க மக்களிடம் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஊடக துறைகளை, பெகாசஸ் மென்பொருள் உளவு பார்ப்பது மிகவும் ஆபத்தானது என எச்சரித்துள்ளார். நாட்டையும், ஜனநாயகத்தையும் உச்ச நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட மம்தா பானர்ஜி, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாஜகவால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி சாடினார்.