சபரிமலை கோயிலில் ஆடி மாத பூஜை - ஜூலை 16 மாலை கோயில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும்16 தேதி மாலை திறக்கபட உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துக்களை இயக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும்16 தேதி மாலை திறக்கபட உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துக்களை இயக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த வைகாசி மற்றும் ஆனி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை .இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16 தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.இதையொட்டி வரும் 17 தேதி அதிகாலை முதல்
21 தேதி மாலை வரை 5 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் வீதம் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. நிலக்கல்- பம்பை சங்கிலி பேருந்து சேவைக்கு தற்போது 15 பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகைகேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கனூர் ரயில் நிலையத்திலிருந்து பம்பை வரையிலும், தேவைப்பட்டால் கோட்டயம்
மற்றும் எருமேலி டிப்போக்களுக்கான சிறப்பு பேருந்து சேவை பம்பைக்கு நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.