ரவிசங்கர் பிரசாத் - அடுத்து என்ன பதவி?
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகருக்கு முக்கிய பதவிகளை வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகருக்கு முக்கிய பதவிகளை வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது பாஜகவின் மூத்த தலைவர்களான ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.இருவருக்கும் புதிய இலாகா ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.இந்நிலையில் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகருக்கு கட்சியில் முக்கிய பதவிகளை வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அல்லது தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுஒருபுறமிருக்க மறுபக்கம் தமிழகத்தின் ஆளுநர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருவதால், ரவிசங்கர் பிரசாத் அல்லது பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரில் ஒருவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.