தேர்தலுக்கு முன்பே வெளியான பட்டியல்.. குற்றப்பிரிவில் தேர்தல் ஆணையம் புகார்

கேரள மாநில வாக்காளர் பட்டியலை கசிய விட்டதாக தேர்தல் ஆணையம் கொடுத்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-07-04 02:44 GMT
தேர்தலுக்கு முன்பே வெளியான பட்டியல்.. குற்றப்பிரிவில் தேர்தல் ஆணையம் புகார் 

கேரள மாநில வாக்காளர் பட்டியலை கசிய விட்டதாக தேர்தல் ஆணையம் கொடுத்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கேரள மாநிலத்தில் 2 கோடியே 76 லட்சம் பேரின் வாக்காளர் பட்டியல் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் குற்றப்பிரிவு போலீசாருக்கு கொடுத்துள்ள புகாரின்படி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்னர், வாக்காளர் பட்டியல் கசிந்ததாகவும், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ள மடிக்கணினியில் இருந்து இந்தப் பட்டியலானது கசிந்ததாகவும் கூறப்பட்டது. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக தேர்தல் ஆணைய புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குற்றப்பிரிவு தலைமையகத்தில் கொடுக்கப்பட்ட இந்தப் புகார், திருவனந்தபுரம் குற்றப்பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக, இரட்டை வாக்காளர்கள் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ஆதாரங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்