தனிநபரின் ரகசிய தகவல் பாதுகாப்பு; அடிப்படை உரிமையாக அரசு அங்கீகரிக்கிறது - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
ஒரு குறிப்பிட்ட செய்தியை முதலில் பதிவிட்டவர் யார் என்பதை வாட்ஸ் ஆப் தெரிவிப்பதின் மூலம் தனிநபர் உரிமையை மீறும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட செய்தியை முதலில் பதிவிட்டவர் யார் என்பதை வாட்ஸ் ஆப் தெரிவிப்பதின் மூலம் தனிநபர் உரிமையை மீறும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
தனிநபர்களின் ரகசிய தகவல்களை பாதுகாப்பதை, அடிப்படை உரிமையாக மத்திய அரசு அங்கீகரிக்கிறது. அதை நாட்டின் அனைத்து மக்களுக்கும் உறுதி செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாராமரிப்பது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா தெரிவித்துள்ள எந்த நடவடிக்கையும், வாஸ்ட் ஆப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது. சாதாரண மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இருக்காது என்று கூறியுள்ள அவர், குறியாக்கம் அல்லது இதர தொழில்நுட்பம் அல்லது இரண்டின் மூலம் தொழில்நுட்ப தீர்வு காண்பது வாட்ஸ் அப் நிறுவனத்தின் பொறுப்பு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.' ''