"கேரளாவில் தடுப்பு மருந்து தீர்ந்துவிட்டது" "மத்திய அரசு மருந்து வாங்கித்தர முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்"

கொரோனா தடுப்பு மருந்தை மாநிலங்கள் நேரடியாக வாங்க முன்வந்துள்ளதால், விலை உயர்வை குறைக்கும் விதமாக மத்திய அரசு மொத்தமாக வாங்கி தர வேண்டும் என கேரள முதல்வர் கோரியுள்ளார்.

Update: 2021-05-25 03:41 GMT
"கேரளாவில் தடுப்பு மருந்து தீர்ந்துவிட்டது" "மத்திய அரசு மருந்து வாங்கித்தர முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்"

கொரோனா தடுப்பு மருந்தை மாநிலங்கள் நேரடியாக வாங்க முன்வந்துள்ளதால், விலை உயர்வை குறைக்கும் விதமாக மத்திய அரசு மொத்தமாக வாங்கி தர வேண்டும் என கேரள முதல்வர் கோரியுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த, முதல்வர் பினராயி விஜயன்,  கேரளாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா  பரவல் குறைந்துள்ளது என்றார். மலப்புரம், திருவனந்தபுரத்தில் தொற்று பரவல் குறையவில்லை என்ற தெரிவித்த பினராயி விஜயன், பாலக்காடு மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளதாக கூறினார். கேரளாவில் தடுப்பு மருந்து காலியாகிவிட்டது என்ற பினராயி விஜயன், தேவை அதிகரிப்பதால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், உலகளாவிய டெண்டர் முறையில் மத்திய அரசு வாங்கித் தர வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக குறிபிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்