"கருப்பு பூஞ்சை நோய்-கூடுதல் மருந்து ஒதுக்கீடு"

கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை கூடுதலாக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-05-22 11:09 GMT
கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை கூடுதலாக மாநிலங்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துகளை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன,இந்த நிலையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கருப்பு புஞ்சை நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக மாநிலங்களுக்கு கூடுதலாக ஆம்போடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்,.இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாடு முழுவதும் இதுவரை 8 ஆயிரத்து 848 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்,.மாநிலங்களுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மொத்தமாக 23 ஆயிரத்து 680 ஆம்போடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,தமிழகத்தில் 40 நோயாளிகள் உள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக மொத்தமாக 140 ஆம்போடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.இந்தியாவிலேயே அதிகப்பட்சமாக குஜராத் மாநிலத்தில்  2 ஆயிரத்து 281 பேர் கருப்பு பூஞ்சை போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சதானந்த கவுடா குறிப்பிட்டுள்ளார்,.
Tags:    

மேலும் செய்திகள்