ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை

இந்தியாவில் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன.

Update: 2021-04-23 09:49 GMT
இந்தியாவில் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17, ஐ.எல். 76 சரக்கு விமானங்கள் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ஆக்சிஜன் உற்பத்தி மைய நகரங்களுக்கு கொண்டுச் செல்கிறது. அங்கு ஆக்சிஜன் நிரப்பப்பட்ட பின்னர் டேங்கர் லாரிகள் தேவையான இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பனாகார்க்கிற்கு டேங்கர் லாரிகளை ஏற்றிக்கொண்டு விமானப்படை விமானங்கள் சென்றன.
Tags:    

மேலும் செய்திகள்