ரெம்டெசிவிர் மூலப்பொருட்கள் இறக்குமதி வரிக்கு விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு
ரெம்டெசிவிர் மூலப்பொருட்கள் இறக்குமதி வரிக்கு விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து மீதான இறக்குமதி வரிக்கு விலக்களித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் இந்த மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெம்டெசிவிர் ஊசி மருந்து மற்றும் அதன் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் மீதான இறக்குமதி வரிக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.