குடியரசு தினத்தில் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள் - 5 எல்லைப் பகுதிகளில் ஏற்பாடு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 61 வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர்.

Update: 2021-01-25 07:20 GMT
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 61 வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர்.மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இது தொடர்பாக, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. விவசாய சட்டங்களை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு, அறிவித்ததை விவசாயிகள் தரப்பு நிராகரித்தது. பெருநிறுவனங்களுக்கு சாதகமாகவே விவசாய சட்டங்கள் திருப்பதால் அவற்றை திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் தரப்பு பிடிவாதமாக உள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் இன்று 61வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்.குடியரசு தினத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ள விவசாயிகள், அதற்கான ஏற்பாடுகளில் செய்து வருகின்றனர். டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் அணி அணியாக டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்