சூடு பிடிக்கிறது பீகார் தேர்தல் களம் - ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக பேச்சு வார்த்தை

சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பீகாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Update: 2020-10-04 02:38 GMT
சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பீகாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி உடன்பாடு முடிந்துள்ளது. 

இந்நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கு இடையே தொகுதி உடன்பாடு பேச்சு வார்த்தை துவங்கி உள்ளது. பீகார் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களை நேற்று இரவு சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி, உள்துறை இணை அமைச்சர் நியானந்த ராய் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்