ரிலையன்ஸ் நிறுவனத்தில் "சில்வர் லேக்" முதலீடு
ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீட்டெயில் வென்ச்சர்ஸ் நிறுவனம் சில்லறை வணிகத்தில் நாடு தழுவிய அளவில் ஈடுபட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீட்டெயில் வென்ச்சர்ஸ் நிறுவனம் சில்லறை வணிகத்தில் நாடு தழுவிய அளவில் ஈடுபட்டுள்ளது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் என்ற நிதி நிறுவனம் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1 புள்ளி ஏழு ஐந்து சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் ரிலையன்ஸ் ரீட்டெயில் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக கணிக்கப்படுகிறது. சில்வர் லேக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 10 ஆயிரத்து 202 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது