சூரத் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் கடந்த 5 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளநீர் நகரைச் சூழ்ந்துள்ளது.

Update: 2020-08-17 06:18 GMT
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் கடந்த 5 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளநீர் நகரைச் சூழ்ந்துள்ளது. தெருக்களில் சுமார் 10 அடிக்கும் மேலாக தண்ணீர் தேங்கி  இருப்பதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதால், பலர் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டு,  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் வடியாததால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்