பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் - கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி

பீகாரில் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், 49 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

Update: 2020-08-02 05:52 GMT
பீகார் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலத்தில் பாயும் பல ஆறுகளில் அபாய அளவுக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நேபாளத்தில் உற்பத்தியாகி பீகாரின் வடமாவட்டங்களை கடந்து செல்லும்  நதிக​ளில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது. 29 தேசிய, மாநில பேரிட​ர் அமைப்பை சேர்ந்த குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகாரில் இதுவரை, சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்