தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உறுப்பினர்கள் குறைவு: உறுப்பினர்களை நியமிக்காதது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் துறையில் நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் அதிர்ச்சி அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-23 09:22 GMT
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் துறையில் நிபுணத்துவம் பெற்ற  உறுப்பினர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் அதிர்ச்சி அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். சுற்றுச்சூழல் நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த, உச்சநீதிமன்றம்,   சுற்றுச்சூழல் பிரச்சினை என்பது தற்பொழுது சர்வதேச அளவிலும் கவனத்தை பெற்றுள்ளதாக கூறியுள்ளது. இது போன்ற சூழலில், குறித்த நேரத்தில் நியமன அறிவிக்கையை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்