சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்க திட்டம் - அமைச்சர் ஜெய்சங்கர்
கடந்த ஓராண்டில் மட்டும் 1 கோடி பாஸ்போர்ட்கள், வெளியுறவு துறை அமைச்சகத்தின் வாயிலாக, வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் 1 கோடி பாஸ்போர்ட்கள், வெளியுறவு துறை அமைச்சகத்தின் வாயிலாக, வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 'பாஸ்போர்ட் சேவா' தினத்தையொட்டி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அஞ்சல் துறை உதவியுடன் வீட்டுக்கே சென்று பாஸ்போர்ட் வழங்க 425 அஞ்சல் துறை பாஸ்போர்ட், சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 'சிப்' பொருத்தப்பட்ட இ- பாஸ்போர்ட்டை, அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.