கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கை - புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 383 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2020-06-23 10:31 GMT
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 383 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 226 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 149 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  8 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதனிடையே புதுச்சேரி கடற்கரை சாலையில்  சமூக இடைவெளியை கடைபிக்காமல் நடை பயிற்சி மேற்கொள்வதால், கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில்,  இன்று முதல் வரும்  10 நாட்களுக்கு கடற்கரை சாலை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,  கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும், இன்று முதல் கடைகள் நேரம் குறைக்கப்பட்டு உள்ளதுடன் பல கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன.  கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு அனுமதிக்காத நிலையில், அருகில் உள்ள சாலைகளில், தற்போது சமூக இடைவெளியை கடைபிடித்து மக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்