இந்திய நிறுவன பங்குகளை வாங்க புதிய நடைமுறை - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு
கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையை பயன்படுத்தி பல வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சக்திகள், இந்திய நிறுவன பங்குகளை வாங்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக ராகுல்காந்தி எச்சரித்திருந்தார்.
கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையை பயன்படுத்தி பல வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சக்திகள், இந்திய நிறுவன பங்குகளை வாங்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக ராகுல்காந்தி எச்சரித்திருந்தார். இந்திய நிறுவனங்களை இத்தகையை அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.