இயல்பு நிலைக்கு திரும்பாத சரக்கு போக்குவரத்து : தேயிலை உற்பத்தியாளர்கள் அச்சம்
சரக்கு வாகன போக்குவரத்து இன்னும் முழுமையாக தொடங்கப்படாத நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை அப்படியே தேங்கி கிடப்பதாக தர்மசாலா தேயிலை உற்பத்தி நிறுவன மேலாளர் அமன்சிங் தெரிவித்துள்ளார்.
சரக்கு வாகன போக்குவரத்து இன்னும் முழுமையாக தொடங்கப்படாத நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை அப்படியே தேங்கி கிடப்பதாக தர்மசாலா தேயிலை உற்பத்தி நிறுவன மேலாளர் அமன்சிங் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்த தேயிலை, ஏப்ரல் மாதத்திற்குள் ஏலம் விடப்படவில்லை என்றால் சுமார் 40 சதவீதம் இழப்பை சந்திக்க நேரிடும் நிலை உள்ளதாகவும் அமன்சிங் கூறியுள்ளார். ஊரடங்கு உத்தரவால் தேயிலை பறிக்க போதிய பணியாளர்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் பெரும்பாலான தேயிலை உற்பத்தியாளர்களின் நிலை இதுதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.