"50 சதவீத பணியாளர்களை அழைத்துக் கொள்ளலாம்" - ஐடி நிறுவனங்கள் இயங்க உள்துறை அனுமதி
50 சதவீத ஊழியர்களை பணிக்கு திரும்ப அழைத்துக் கொள்ள ஐடி நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
50 சதவீத ஊழியர்களை பணிக்கு திரும்ப அழைத்துக் கொள்ள ஐடி நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர், படிப்படியாக தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், பல நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களை மட்டுமே திரும்ப அழைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைப்பான நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 முதல் 20 சதவீத ஊழியர்களை திரும்ப அழைத்து படிப்படியாக பணிகளை தொடங்க வலியுறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளது.