கொரோனா- மாற்று மருத்துவ முறை கோரிய மனு - மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக மருத்துவர் சிவராம் தாக்கல் செய்த மனுவில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த யுனானி, ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளை ஆராயவும், விரைவில் தடுப்பு ஊசி மருந்தை கண்டுபிடிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவும் கோரியிருந்தார். மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, கொரோனா ஒரு புதிய வகை வைரஸ் என்பதால் மாற்று மருத்துவத்தை பரிசோதித்துப் பார்க்க முடியாது என தெரிவித்தனர். கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.