கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை - உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-03-23 09:28 GMT
உச்சநீதிமன்றத்துக்கு 4 வாரம் விடுமுறை அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம் முறையீடு செய்தது. இது குறித்து தலைமை நீதிபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், வழக்கறிஞர்கள், அவர்களது சொந்த அலுவலகத்தில் இருந்து விசாரணையில் பங்கேற்கும் வசதி செய்து தரப்படும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை, நேரடி விசாரணை கிடையாது எனவும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறைகள், இன்று மாலை 5 மணிக்குக சீல் வைக்கப்பட உள்ளதாகவும், அதற்குள் அங்குள்ள ஆவணங்களை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாய உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யவதற்கு கால வரம்பு இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்