"ஆந்திராவில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிகை நடவடிக்கை"
"வீட்டிற்கு வந்து ரேஷன் பொருள் வழங்கப்படும்"
ஆந்திராவில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, வரும் 27ஆம் தேதி வீட்டிற்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அவர் கூறினார். ஏப்ரல் முதல் வாரத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், வீட்டிற்கே வந்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.