கொரோனா பாதிப்பு - விமான நிறுவனங்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக விமான சேவை நிறுத்தப் பட்டுள்ளதால் விமான நிறுவனங்களுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-03-11 11:40 GMT
கொரோனா பாதிப்பு காரணமாக விமான சேவை நிறுத்தப் பட்டுள்ளதால், விமான  நிறுவனங்களுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், பல நாடுகளிலும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் கடந்த 2 மாதங்களில் 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை நிறுத்தம் காரணமாக ஏற்பட்ட இழப்புகளுடன், விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான செலவு, வாடகை உள்ளிட்டவைகளும் நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளன. போயிங் ரக விமானங்களை நிறுத்துவதற்கு தினசரி ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்