நிர்பயா வழக்கு - குற்றவாளி பவன்குமார் மறு சீராய்வு மனு தள்ளுபடி
நிர்பயா கொலை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மருத்துவ மாணவியான நிர்பயா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை மறு சீராய்வு செய்ய கோரி, பவன்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு,
உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், பவன் குமாரின் தண்டனையை குறைப்பதற்கான புதிய காரணம் எதுவுமில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை காலை டெல்லி திகார் சிறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.