நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரம் - பிப்ரவரி 11 - ந்தேதிக்கு ஒத்தி வைப்பு

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Update: 2020-02-07 09:28 GMT
இது தொடர்பான மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்பயா குற்றவாளிகள் முகேஷ், வினய், அக்ஷய் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். 

அப்போது, வினய் மட்டும் எவ்வித மனுவையும் தாக்கல் செய்யவில்லையா? என  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த மனு தொடர்பாக குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உத்தரவிட வேண்டும் என, துஷார் மேத்தா கோரினார்.  ஆனால், குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் வழங்க மறுத்ததுடன் வழக்கு விசாரணையை பிப்ரவரி 11 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைத்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்