போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு - இணைய விளையாட்டை அறிமுகப்படுத்திய கேரள அரசு

இளைய தலைமுறையினரிடம் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த பலூன் உடைக்கும் இணைய விளையாட்டை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

Update: 2020-02-01 03:29 GMT
இளைய தலைமுறையினரிடம் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த பலூன் உடைக்கும் இணைய விளையாட்டை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. போதையிலிருந்து விடுதலை என்ற திட்டத்தை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.  அதன் படி இணைய விளையாட்டில், ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருள் நிரப்பப்பட்ட பலூன்களை உடைக்க வேண்டும் என்றும் அவ்வாறு முதலிடத்தை பிடிப்போருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளதாகவும் கேரள கலால் வரி துறை அமைச்சர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்