"பொருளாதார பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம்" - பிரதமர் நரேந்திர மோடி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி உள்ளது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த பத்தாண்டுக்கான வலிமையான கட்டமைப்பை நடப்பு கூட்டத் தொடரில் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் என உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத் தொடரில் பொருளாதார பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக இருஅவைகளிலும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.