"கொரானா வைரஸ் - மக்கள் அச்சப்பட தேவையில்லை" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன்

கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-28 19:11 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான உடல் பரிசோதனை 7 விமான நிலையங்களில் நடைபெற்று வருவதாகவும், இந்த எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார். நோய் குறித்த அறிகுறி தென்படும் ஒவ்வொருவரும் தனித்தனியாக பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா  வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை என்றும், அனைத்து மாநில அரசுகளுக்கும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்