"நீட் தேர்வு - இந்தியா முழுவதும் 15,93,452 பேர் விண்ணப்பம்" - தேசிய தேர்வு முகமை தகவல்
இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்காக 15,93,452 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்காக 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அதில் தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர்2ம் தேதி முதல் ஜனவரி 6 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றில் திருத்தம் செய்வதற்கு வரும்15 ந் தேதி முதல் 31 ந் தேதி வரையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. மேலும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், மார்ச் 27ம் தேதி வெளியிடப்பட்டு, மே 3ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்றும், ஜூன் 4 அன்று முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.