நொய்டா இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று காலை 9.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று காலை 9.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த 120-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.