திருநங்கைகளுக்காக கேரள அரசு புதிய முயற்சி - ஓவியம் தீட்டி அசத்திய திருநங்கைகள்
திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக கேரள அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,
கேரள அரசின் இளைஞர் நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான ஓவிய கண்காட்சி கொச்சியில் நடத்தப்பட்டது ... திருநங்கைகளுக்குள் மறைந்திருக்கும் கலைத் திறமையை ஓவியம் மூலம் வெளிப்படுத்தி , தாங்கள் சமுதாயத்திற்கு சொல்ல விரும்பும் கருத்துக்களை மக்கள் முன் சமர்ப்பிக்க வைப்பதே அந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
நிகழ்வில் உற்சாகத்துடன் 20 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று வண்ணமயமான ஓவியங்களை தீட்டி அசத்தினர்.அந்த அழகு ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சி பந்தலில் காட்சிப்படுத்தப்பட்டது.
ஓவியங்களை ரசித்த பொதுமக்கள் , திருநங்கைகளை மனதார பாராட்டினர். சமூகம் தங்களை புறந்தள்ளும் சந்தர்பபங்களில் இப்படி ஒரு வாய்ப்பளித்த கேரள அரசுக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்தனர்.