புதுடெல்லி : உலகத்தரமான வர்த்தக மையமாகும் பிரகதி மைதானம்

புதுடெல்லியில் தொழில் வர்த்தக கண்காட்சிகள் நடைபெற்று வந்த பிரகதி மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த வர்த்தக மையமாக உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2019-12-05 02:31 GMT
புதுடெல்லியில், தொழில் வர்த்தக கண்காட்சிகள் நடைபெற்று வந்த பிரகதி மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த வர்த்தக மையமாக உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தலைநகர் டெல்லியின் முக்கிய வர்த்தக அடையாளமாக இருந்து வருகிறது பிரகதி மைதானம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் கட்டப்பட்ட, இந்த மைதானத்தை இந்திய அரசின் தொழில் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. 150 ஏக்கரில் அமைந்த இந்த மைதானத்தில்,  மிகப்பெரிய வர்த்தக கண்காட்சிகள் நடைபெற்று வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு சர்வதேச தரத்தில் வர்த்தக  மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மைதானத்தில் 3.7 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு  குத்தகைக்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

5 நட்சத்திர ஓட்டல் கட்ட, ஐ.ஆர்.சி.டி.சி உள்பட சர்வதேச  நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. 'மேக் இன் இந்தியா', 'ஸ்கில் இந்தியா' மற்றும் 'இன்வெஸ்ட் இந்தியா' போன்ற திட்டங்களை கொண்டு செல்ல இந்த சர்வதேச வர்த்தக மையம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 611 கோடி ரூபாய் மதிப்பில் , 2020-21 ஆம் ஆண்டில் கட்டுமான பணிகளை முடிக்கவும்  திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட அரங்குகள், தங்கும் வசதி, மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நடத்துவதற்கு என ஒருங்கிணைந்த மையமாக புதிய மையம் உருவாகும். வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், வர்த்தக செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு இந்த முடிவினை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்