அயோத்தி விவகாரம் : மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் சார்பில் மத்திய பாதுகாப்பு படையினர் 4 ஆயிரம் பேர் உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அயோத்தி தீர்ப்பை ஒட்டி, சட்டம் ஒழுங்கை தீவிரமான கண்காணிக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.