4 நாள் விடுமுறைக்கு பின் இந்திய பங்குச் சந்தைகள் சீரற்ற நிலை - சர்வதேச பங்குச் சந்தைகளும் சரிவு
இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கமான நிலையில் வர்த்தகமாகி வருகின்றன.
இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கமான நிலையில் வர்த்தகமாகி வருகின்றன. நான்கு நாள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று வர்த்தகம் தொடங்கிய போது, ஏற்றத்தில் தொடங்கி , பின்னர் சரியத் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை சரிந்த நிலையில், தற்போது ஏற்றம் கண்டு வர்த்தகாகி வருகிறது. நிப்டி குறியீடும் ஏற்ற இறக்கமாக உள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவடைந்துள்ள நிலையில், இந்திய சந்தைகளிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.