தசராவை முன்னிட்டு பாரம்பரியமிக்க "ராஜ தர்பார்" : மைசூரு அரண்மனையில் விழாக்கோலம்

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின், முக்கிய நிகழ்வான, யானைகள் அம்பாரி ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2019-10-08 12:25 GMT
தசரா திருவிழாவை  முன்னிட்டு, மைசூரு அரண்மனையில் பாரம்பரிய மிக்க ராஜ தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகாராஜா யதுவீர் பாரம்பரிய சடங்குகளை செய்தார். ஒவ்வொரு வருடமும், தசரா திருவிழாவின் போது அரியணையில் இருக்கும் ராஜா, "ஷமி" என்ற மரத்திற்கு சடங்குகள் செய்வது வழக்கம். இந்த ஆண்டும், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தசரா திருவிழாவிற்காக, மைசூரு அரண்மனையே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதை தொடர்ந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் தசரா திருவிழா களைகட்டியது. பல்வேறு மாநிலங்களின், கலாசார பெருமையை உணர்த்தும் வகையில், ஏராளமானோர் பல்வேறு வேடமிட்டு, ஊர்வலமாகநடந்து சென்றனர். இக்காட்சிகளை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். முக்கிய நிகழ்வான, யானைகள் அம்பாரி ஊர்வலமும் பிரம்மாண்டமான நடைபெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்