திருப்பதி: செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 4 பேர் கைது
திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சேஷாசலம் மலையில் உள்ள வனப்பகுதியில், செம்மரங்கள் வெட்டப்படுவதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள், கடத்த வைத்திருந்த 639 கிலோ எடை கொண்ட, 19 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த வனத்துறை, அங்கிருந்த 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த தனபால் என்று தெரியவந்துள்ளது. கைதான 4 பேரையும், வனத்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி. சிறையில் அடைத்தனர்.