உரவிற்பனை நடப்பு நிதியாண்டில் 25% அதிகரிப்பு : தேசிய உர நிறுவனம் தகவல்

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் 27 லட்சம் டன் உரங்கள் விற்பனையாகி உள்ளதாக தேசிய உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2019-10-07 21:36 GMT
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் 27 லட்சம் டன் உரங்கள் விற்பனையாகி உள்ளதாக தேசிய உர நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில்  21 புள்ளி 62 லட்சம் டன்கள் தான் உரங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 25 சதவீதம் உரவிற்பனை அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யூரியா 20 சதவீதமும், டை அமோனியம் பாஸ்பேட் விற்பனை 80 சதவீதமும்  அதிகரித்து உள்ளதாக தேசிய உர நிறுவனம் தெரிவித்துள்ளது. காரீப் பருவம் செப்டம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், அறுவடை செய்யப்படும் தானியங்கள் அடுத்த மாதம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்