ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மீண்டும் மறுப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2019-09-30 15:39 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனு, நீதிபதி சுரேஷ் குமார் முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷர் மேத்தா, சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினால், அவர் சாட்சிகளை கலைக்க கூடும் என்று வாதாடினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுரேஷ் குமார், சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்