காந்தி பிறந்த நாள் : தேசப்பிதா மகாத்மா காந்தியை மறந்ததா கல்வித்துறை?
மத்திய அரசின் உத்தரவுக்கு பின்னரும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்படாத நிலையில், வரும் 2 ஆம் தேதி கொண்டாடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், காந்தியின் 150 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என, மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அரசு பள்ளிகளில் காந்தி பிறந்த நாள் தொடர்பாக எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. மத்திய அரசின் சுற்றறிக்கையை தொடர்ந்த, காலாண்டு தேர்வு விடுமுறை இல்லையா என கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடக்கும் எனவும், அதில் ஆர்வம் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இதனிடையே எந்த ஒரு அரசு பள்ளியிலும் காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 3 ஆம் தேதி பள்ளி திறந்த பின்னர் காந்தி பிறந்த நாளை கொண்டாடிக் கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.