ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தமிழக பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசுடன் பேசி விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தெரிவித்தார்.

Update: 2019-09-23 11:10 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் அறங்காவலர் குழு 36 பேருடன் அமைத்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அறங்காவலர் குழு தலைவராக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஓய்.வி. சுப்பாரெட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மூன்று உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில், 31 பேருக்கு ஏழுமலையான் கோயிலில் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி உறுப்பினர்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதல் முறையாக தமிழகத்தில் இருந்து 5 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழர்கள் தங்குவதற்கு விருந்தினர் மாளிகை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்