தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் விவகாரம் : குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது

Update: 2019-09-12 23:50 GMT
இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிரான தமிழகத்தின் மனு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித், வினீத்  சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நீர்வளத்துறை ஆணைத்தின் ஆலோசனையின் படியே கர்நாடக அரசு திட்டத்தை தொடர்ந்து வருவதாகவும், கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதால் பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, கர்நாடக அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அணை திட்டம் தொடர்பாக அறிக்கையை தமிழக அரசுக்கு கர்நாடக அரசு அளிக்கவில்லை என்றும் வாதிட்டார். மேலும் இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் பெரிய அளவில் குடிநீர் பற்றாகுறை ஏற்படும் என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்