பெண் குழந்தைகளுக்கு 'காவிரி' என்ற பெயர் வையுங்கள் - ஜக்கி வாசுதேவ்
காவிரி நதிக்கு புத்துயிரூட்ட, 'காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை தொடங்கி உள்ள 'ஈஷா' அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைக்காவிரி முதல் சென்னை வரை மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
காவிரி நதிக்கு புத்துயிரூட்ட, 'காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை தொடங்கி உள்ள 'ஈஷா' அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைக்காவிரி முதல் சென்னை வரை, மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சேலம் மாவட்டம் பொட்டனேரிக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . நிகழ்ச்சியில் பேசிய அவர் , 100 ஆண்டுகளில் நட வேண்டிய 242 கோடி மரங்களை மூன்று ஆண்டுகளில் நட்டு வளர்த்தால் 12 ஆண்டுகளில், காவிரியாற்றில் தண்ணீர் பார்க்க முடியும் என்றார். மேட்டூரில் பிறந்த பெண்குழந்தைகளுக்கு காவிரி எனப் பெயர் வைக்க வேண்டும் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.