நிலவு ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா ஆதிக்கம்

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் சற்று பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் வரலாற்றில் நிலவு ஆய்வு குறித்து பார்க்கலாம்.

Update: 2019-09-07 22:36 GMT
கடந்த 60 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் இதுவரை பல்வேறு நாடுகள் நடத்திய 109 நிலவு ஆராய்ச்சி திட்டங்களில் 61 திட்டங்கள் வெற்றிபெற்றவை. மிதமுள்ள 48 திட்டங்கள் தோல்வியை தழுவிய. 

அதுவும்   'சாப்ட் லேண்டிங்' முறையில் விண்கலங்களை தரையிறக்க 38 முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் 20 முறை வெற்றிகரமாக நிலவில் விண்கலங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது.இதில் சந்திரயான் - 1 விண்கலமும் ஒன்று.

முதன் முறையாக மனிதனை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த அமெரிக்கா கூட, பத்து ஆண்டுகளின் முயற்சியின் பலனாகதான் இந்த  வெற்றியை ருசித்தது.

கடந்த 1958 ஆம் ஆண்டு நிலவில் ஆராய்ச்சி செய்வது தொடர்பான அமெரிக்காவின் விண்வெளி திட்டம் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து பணியாற்றிய 14 நிலவு ஆராய்ச்சி திட்டங்களில் 3 மட்டுமே வெற்றி பெற்றன.

முதன் முறையாக கடந்த 1964 ஆம் ஆண்டு நிலவுவின் மிக அருகிலான புகைப்படங்களை வெளியிட்டது, அமெரிக்காவின் ரேன்ஞர்- 7 

1966 ஆம் ஆண்டு முதல் முறையாக சாப்ட் லேண்டிங்' முறையை பயன்படுத்தி தரையிறங்கிய ரஷ்ய விண்கலம் லூனா 9 , நிலவின் தரைப்பரப்பை புகைப்படம் எடுத்தது.

இப்படி பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தான், கடந்த 1969 ஆம் ஆண்டு நிலவில் கால்பதித்த முதல் மனிதரானார், அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்டிராக்.

கடந்த 1958 முதல் 1979 ஆம் ஆண்டு  வரையிலான இடைப்பட்ட காலங்களில்  அமெரிக்க மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் மட்டுமே நிலவு ஆராய்ச்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

இந்த  21 ஆண்டுகளில்  மட்டும் இவ்விரு நாடுகளும் 90 விண்கலங்களை நிலவிற்கு அனுப்பியுள்ளன.

2000ல்களில் தான் ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சீனா, இந்தியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் நிலவு ஆராய்ச்சியில் தடம்பதிக்க தொடங்கின.

 சீனா நிலவு ஆராய்ச்சிக்கு  செலவு செய்த தொகை 
5 ஆயிரத்து 759 கோடி என்ற நிலையில், அதில் ஒரு பங்கான 978 கோடி ருபாயை தான் இந்தியா செலவழித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மீண்டும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப நாசா முயற்சித்து வரும் நிலையில், சீனாவும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மனிதர்களை நிலவிற்கு அனுப்ப திட்டமிட்டு வருகிறது.

நிலவு ஆராய்ச்சியில் வெற்றி விகிதம் 60 சதவீதம் என்று 
நாசா அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், விண்வெளி திட்டத்தில் வெற்றிக்கான புதிய உச்சத்தை வருங்காலங்களில் இந்தியா நிச்சயம் எட்டும் என்பதில் ஐயம் இல்லை.



Tags:    

மேலும் செய்திகள்