ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு செப்.19 வரை நீதிமன்ற காவல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார் .

Update: 2019-09-05 19:18 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ப. சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்காக, ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ல் விதிமுறைகளை மீறி, அனுமதி அளிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கில் கைதான ப.சிதம்பரத்தின் 15 நாள் சிபிஐ காவல் முடிந்த நிலையில், அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம், பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு வேனில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, 1- வது சிறையின் 9 - வது வார்டில் அவர்,  அடைக்கப்பட்டுள்ளார். வருகிற 16ம் தேதி ப.சிதம்பரத்தின் 74வது பிறந்த நாளாகும். இந்த பிறந்த நாளை, திகார் சிறையில் கொண்டாடும் சூழல் உருவாகி உள்ளது.

ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங். தொண்டர்கள் முற்றுகை 




ப. சிதம்பரத்தை திஹார் சிறையில் அடைக்க, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட தகவல் வெளியானதும், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், அதிர்ச்சி அடைந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்