நிலவில் தரையிறங்க தயாராகிறது சந்திரயான்- 2

சந்திரயான் 2 விண்கலம் நிலவில் இறங்க தயாராகி வருகிறது.

Update: 2019-09-01 17:21 GMT
கடந்த ஜூலை 22 ம் தேதி விண்ணில் அனுப்பப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம், படிப்படியாக நிலவை வெற்றிகரமாக நெருங்கி வருகிறது. நிலவின் பல்வேறு பகுதிகளை புகைப்படம் எடுத்து, 2 முறை அனுப்பி உள்ள சந்திரயான் 2 விண்கலம், நிலவில் தரையிறங்குவதற்காக படிப்படியாக வேகத்தைக் குறைத்து, சுற்றுவட்டப் பாதையின் விட்டம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நான்கு முறை அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை ஐந்தாவது மற்றும் இறுதி முறையாக சந்திரயான் - 2 விண்கலத்தின் சுற்று வட்டப் பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் என்ற விண்கலம் நாளை பிரியும் பணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இஸ்ரோ திட்டமிட்டபடி வரும் 7 ம் தேதி, நிலவின் தென் துருவத்தில், சந்திரயான் - 2 விண்கலம் தரையிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்