ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப். 2 வரை நீட்டிப்பு - டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அவரது காவலை நீடித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-30 10:50 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால்  கைது செய்யப்பட்ட  ப.சிதம்பரம்  டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.. ப.சிதம்பரத்தை 10 நாள் காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ , விசாரணை காவலை மேலும் 5  நாட்களுக்கு நீடிக்க  அனுமதி கோரியது. இதற்கு ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் தயானந்த் எதிர்ப்பு தெரிவித்தார்.  முடிவில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மூன்றாவது முறையாக சிபிஐயின் கோரிக்கையை ஏற்று, செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ப. சிதம்பரத்தின் விசாரணை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்