ப.சிதம்பரத்துக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு
ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை ஏற்கனவே சிபிஐ காவலில் எடுத்து விசாரித்தது. அவரது விசாரணை காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது விசாரணையின் போது சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்காததால் அவரை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சிதம்பரத்தின் காவலை வரும் 30ஆம் தேதி நீட்டித்து உத்தரவிட்டது.